×

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்... இ.பி.எஸ் - ஸ்டாலின் இணைந்து தேர்தலை சந்திப்பார்கள் - ஆதவ் அர்ஜுனா..! 

 

தி.மு.க-விலிருந்து பதவி விலகிய 3 எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்ததைக் குதிரை பேரம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், அதற்குத் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க-வில் இணைந்தது மட்டும் குதிரை பேரம் கிடையாதா எனக் கேள்வி எழுப்பியதோடு, "எழுதி வைத்துக்கொள்ளுங்கள், வரக்கூடிய தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமியும் - மு.க.ஸ்டாலினும் ஒன்றாக இணைந்துதான் தேர்தலைச் சந்திப்பார்கள்" என்றும் அதிரடியாகக் கணித்துக் கூறியுள்ளார்.

திமுக, அதிமுக, பாஜக இணைந்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜக மற்றும் அதிமுகவுடன் இணைந்து மக்களுக்கு எதிரான ஆட்சி உருவாக்க நினைத்தார்கள். 

ஊழலை ஒழித்தவர் எங்கள் முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள். தமிழக வெற்றிக் கழகத்தை புதிய அதிமுகவாக நினைக்கிறார்கள். வரும் தேர்தலில் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இணைந்து அரசியலை உருவாக்குவார்கள்‌. 3 எம்எல்ஏக்கள் வந்தது குதிரை பேரம் என முன்னாள் முதலமைச்சர் குற்றம்சாட்டினார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தது குதிரை பேரம் இல்லையா?

இன்னும் அதிமுகவில் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்களை நாங்கள் வரவேற்கிறோம். மு.க.ஸ்டாலின் தோல்விக்கு மருமகன் சபரீசன் மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலின் தான் காரணம். இடைத்தேர்தலில் பரப்புரை செய்வோம். யார் வெற்றி பெறுவார்கள் என்று பார்க்கலாம். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வரக்கூடாது என்று அதிமுக தொண்டர்களும், தவெக தொண்டர்களும் இணைந்து பணி‌யாற்றினர். குறிப்பாக எனது தொகுதியான வில்லிவாக்கத்தில் அதிமுக, தவெகவும் இணைந்து வேலை செய்தனர். அதிமுகவில் இருந்து பலரும் இங்கு வர உள்ளனர்.