லாரியில் இருந்து கொத்தாக விழும் புழுக்கள்- அதிர்ச்சியில் மக்கள்
கேரளாவில் இருந்து சிமெண்ட் ஆலைக்கு கழிவுகளை ஏற்றி வந்த லாரி, சாலையில் பழுதாகி நிற்க, அதில் இருந்து புழுக்கள் வெளியே விழுந்ததால் மக்கள் அதிர்ச்சிக்க்குள்ளாகினர்.
கேரளாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து 15,070 டன் பிளாஸ்டிக் கழிவுகளை லாரி ஒன்று ஏற்றி வந்தது. கேரளாவிலிருந்து திருச்சி சிமெண்ட் ஆலைக்கு பிளாஸ்டிக் கழிவு ஏற்றி வந்த அந்த லாரி நெல்லை துறையூரில் டயர் பஞ்சராகி நின்றது. அதிலிருந்து துர்நாற்றத்துடன் ஆயிரக்கணக்கான புழுக்கள் கொட்டியதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். மேலும் புழுக்கள் சாலையில் பரவி, தொற்றுநோய் ஏற்படும் அச்சத்தில் தூய்மை பணியாளர்கள் ப்ளீச்சிங் பவுடர் தூவினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ,'கிளீன் கேரளா' நிறுவனம் விதிமீறி அழுகிய கழிவுகளை அனுப்பியது ஏன் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விசாரித்து வருகின்றனர். உள்ளே இருந்தது என்ன.? என்றும் விசாரணை செய்துவருகின்றனர்.