×

15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் “உலகத் தமிழ் மாநாடு”

 

15 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தமிழ் மாநாட்டை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

15 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தமிழ் மாநாட்டை தமிழக அரசு நடத்தவுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மாநாட்டை நடத்த முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்த நிலையில், முதற்கட்ட பணிகள் தொடங்கியது. இதுகுறித்து முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் ராஜ்மோகன், "அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றுள்ளது. உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த மாநாடு மிக முக்கியமானதாக இருக்கும். உலகத் தமிழர்களை இணைப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்" என்று தெரிவித்தார்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மொழி, பண்பாடு, இலக்கியம், வரலாறு மற்றும் கலாச்சாரத்தை ஒரே மேடையில் இணைக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து அரசு தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், ஆலோசனை நடத்த அமைச்சர் ராஜ்மோகன் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார்.