☰
×

உலக சாதனை முயற்சி : சென்னையில் 47.8 அடி உயரத்தில் பிரமாண்ட கொலு..! 

 

சென்னை, பெரம்பூரில் அமைந்துள்ள எஸ்.பி.ஆர். சிட்டி (SPR City), 2026 ஆம் ஆண்டிற்கான 'எஸ்.பி.ஆர். சிட்டி நவராத்திரி உத்சவத்தின்' ஒரு பகுதியாக, 47.8 அடி உயரமுள்ள பிரமாண்ட கொலுவை அமைத்துள்ளது. அக்டோபர் 11 முதல் 20 வரை நடைபெறும் இக்கொண்டாட்டத்தின் முக்கிய ஈர்ப்பாக இந்தக் கொலு அமையவுள்ளது.

லண்டனைச் சேர்ந்த வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (World Book of Records) அமைப்புடன் இணைந்து, கொலு அமைப்பின் உயரத்தை அடிப்படையாகக் கொண்டு உலக சாதனை முயற்சியாக இந்த 47.8 அடி உயரக் கொலு முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு முன்பு, 2012 ஆம் ஆண்டு சென்னையில் அமைக்கப்பட்ட 36.4 அடி உயரக் கொலு, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (India Book of Records) அமைப்பால் பதிவு செய்யப்பட்டிருந்தது. புதிய சாதனைக்கான அங்கீகாரம் அதிகாரப்பூர்வ சரிபார்ப்புக்கு உட்பட்டதாகும்.

இந்த 47.8 அடி உயரத்தைத் தேர்ந்தெடுத்ததற்குப் பின்னால் எஸ்.பி.ஆர். சிட்டியுடன் தொடர்புடைய சிறப்புக் காரணம் உள்ளது. இந்த ஒருங்கிணைந்த நகர்ப்புற வளாகத்தில் 47 தளங்களைக் கொண்ட குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இது சென்னை நகரின் மிக உயரமான குடியிருப்பு வளாகமாகக் குறிப்பிடப்படுகிறது. சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான இந்த வளாகத்தையும், தமிழ்நாட்டின் மிகவும் விரும்பப்படும் பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி கொலு மரபையும் இணைக்கும் வகையில், அதே எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு கொலுவின் உயரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பத்து நாள் விழாவின்போது, தினசரி பூஜைகள், கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்கும் பல்வேறு செயல்பாடுகளில் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம். நவராத்திரி மற்றும் கொலு பாரம்பரியத்தைக் கொண்டாடுவதற்காகச் சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைப்பதே இந்த விழாவின் நோக்கமாகும்.
 

 

இந்த விழாவில் எஸ்.பி.ஆர். இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் திரு. நவின் ரங்கா, வருவாய்ப் பிரிவு துணைத் தலைவர் திரு. பிரகாஷ் மோகனசுந்தரம், விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவிற்கான முதுநிலை துணைத் தலைவர் திரு. பாலகுமார் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து எஸ்.பி.ஆர். குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஹிதேஷ் கவாட் கூறுகையில், “நவராத்திரி என்பது தாய்மை, பாரம்பரியம், பக்தி மற்றும் ஒற்றுமையைக் கொண்டாடும் திருவிழாவாகும். இந்தியக் கலாசாரம் உலகிலேயே மிகவும் தனித்துவமானது. 4,500-க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் மனித வாழ்வின் பல்வேறு அம்சங்களை எடுத்துரைக்கின்றன. உலக சாதனை முயற்சியைப் பொறுத்தவரை, எஸ்.பி.ஆர். சிட்டியில் அமைந்துள்ள எங்களது டவர் எச்(Tower H)-இன் 47 தளங்களால் ஈர்க்கப்பட்டே 47.8 அடி உயரக் கொலுவை அமைக்கிறோம். இந்தப் பாரம்பரியத்தையும், செழிப்பையும் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதே எங்களது முயற்சியாகும். சென்னையைச் சேர்ந்த அனைவரையும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்க அன்புடன் வரவேற்கிறோம்” என்றார்.

எஸ்.பி.ஆர். இந்தியா-வின் இயக்குநர் திரு. நவின் ரங்கா கூறுகையில் “உயரமான கட்டிடம் என்பது பணக்காரர்களுக்கான விஷயம் மட்டுமல்ல. அது பண்பானவர்களுக்கும் உரியது தான். நம் சென்னை நகரில் வசிக்கும் ஒவ்வொருவரும் ஹெச்.என்.ஐ. (HNI - High Net-worth Individual) அந்தஸ்து உடையவர் தான்.  ஹெச்.என்.ஐ. என்றால் உயர் மதிப்பு கொண்ட குடிமகன் என்பது மட்டும் அர்த்தம் அல்ல. நம் சென்னையில் ஒவ்வொரு குடிமகனும் உயரிய நற்பண்புகளான நல்லிணக்கம் (Harmony), உயரிய நற்பண்புகள் (Nobility), அக அமைதி (Inner Peace) ஆகியவற்றைக் கொண்டிருப்பதையும் குறிக்கிறது.  இதுவே உலகின் மிக உயரமான கொலுவின் நோக்கமாகும்” என்றார்.

பொதுமக்களுக்கான கொண்டாட்டம்: 11–20 அக்டோபர் 2026 | எஸ்.பி.ஆர். சிட்டி (SPR City) / மார்க்கெட் ஆப் இந்தியா  (Market of India) எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் (Experience Centre), பெரம்பூர். அனுமதி இலவசம்.