உலகப்புகைப்பட கலைஞர்கள் தினம் - செல்வப்பெருந்தகை வாழ்த்து!!
Aug 19, 2023, 13:08 IST
உலக புகைப்பட தினத்தையொட்டி காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை வாழ்த்து கூறியுள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை தந்து ட்விட்டர் பக்கத்தில், காடுகள் முதல் வாழ்வியல் வரை - ஒரு சர்வதேச புகைப்படக் கலைஞரின் அனுபவம் அனைவரையும் ஈர்க்கக் கூடிய ஆற்றலைப் பெற்றது புகைப்பட கலை. அதன் படைப்பாளிகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் இன்றைய தினம் (ஆகஸ்ட் 19ஆம் தேதி) 'உலக புகைப்பட தினமாக' கடைப்பிடிக்கப்படுகிறது.
புகைப்படக்கலைஞர்கள் எடுப்பது வெறும் புகைப்படங்களை அல்ல. படங்களை தேடி அலையும் பெரும் பயணம் அது. அந்த பயணம்தான், சமூகத்தையும் வாழ்வையும் இயற்கையையும் நாம் அறிந்து கொள்ள உதவுகிறது.
அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் புகைப்படக்கலைஞர்களுக்கு, உலகப்புகைப்பட கலைஞர்கள் தின நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.