"குருதிக் கொடை நல்கும் ஒவ்வொருவரும் போற்றுதலுக்குரிய கதாநாயகர்கள்" - கமல் ஹாசன் ட்வீட்
குருதிக் கொடை நல்கும் ஒவ்வொருவரும் போற்றுதலுக்குரிய கதாநாயகர்கள் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
உலக ரத்த தான தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அன்று கொண்டாடப்படுகிறது . இந்த நிகழ்வு 2004 ஆம் ஆண்டு முதல் முறையாக நான்கு முக்கிய சர்வதேச அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. உலக சுகாதார அமைப்பு , செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சிலுவை சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு ; இரத்த தானம் வழங்கும் அமைப்புகளின் சர்வதேச கூட்டமைப்பு ( IFBDO) மற்றும் இன்டர்நேஷனல் சொசைட்டி ஆஃப் ப்ளட் டிரான்ஸ்ஃபியூஷன் (ISBT) ஆகியவை பாதுகாப்பான இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்களின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு , இரத்த தானம் செய்பவர்களுக்கு அவர்களின் தன்னார்வ , உயிர்காக்கும் பரிசுகளுக்கு நன்றி தெரிவிக்கின்றன.
பாதுகாப்பாக ரத்த தானம் செய்வது எப்படி? ரத்தம் தொடர்பான பிற தானங்கள் செய்வது ஏன் அவசியம் போன்றவை குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும், அச்சேவைகளை இலவசமாக செய்து வரும் தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவிப்பதும் தினத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.