×

அதிமுக எம்எல்ஏ குமரகுருவை முற்றுகையிட்ட பெண்கள் !

உளுந்தூர்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவை பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், மூலசமுத்திரத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுரு கலந்து கொண்டார். அப்போது அப்பகுதியை சேர்ந்த 50ற்கும் மேற்பட்ட பெண்கள் எம்எல்ஏ குமரகுருவை முற்றுகையிட்டனர். அப்பகுதியில் கோயில் கட்டுவதை தனிநபர்கள் சிலர் சேர்ந்து தடுத்து நிறுத்தியதாக அவர்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது . இது தொடர்பாக
 

உளுந்தூர்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவை பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூலசமுத்திரத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுரு கலந்து கொண்டார். அப்போது அப்பகுதியை சேர்ந்த 50ற்கும் மேற்பட்ட பெண்கள் எம்எல்ஏ குமரகுருவை முற்றுகையிட்டனர்.

அப்பகுதியில் கோயில் கட்டுவதை தனிநபர்கள் சிலர் சேர்ந்து தடுத்து நிறுத்தியதாக அவர்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது . இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதி அளித்ததால் முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.