×

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரை செருப்பால் தாக்கிய பெண்கள்

 

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரை பெண்கள் ஒன்று சேர்ந்து செருப்பால் அடித்த வீடியோ வைரலாகிவருகிறது.

அக்கடவல்லியில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த அரசுப் பேருந்தில் 10 பெண்கள் ஏறியுள்ளனர். அப்போது பேருந்தின் குறுக்கே வந்த இருசக்கர வாகன ஓட்டியை ஓட்டுநர் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் தங்களைத் தான் திட்டுவதாக நினைத்து பெண்கள் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். தன்னிடம் வாக்குவாதம் செய்த பெண்களை அரசு பேருந்து ஓட்டுநர் நடுவழியில் இறக்கிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து வேறொரு பேருந்தில் ஏறி பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு வந்த அந்த பெண்கள், பேருந்தில் இருந்து இறங்கிய அந்த ஓட்டுநரை பேருந்து நிலையத்தில் செருப்பால் அடித்துள்ளனர். தன்னை செருப்பால் அடித்த பெண்களில் ஒருவரை அரசு பேருந்து ஓட்டுநரும் பதிலுக்கு தாக்கியுள்ளார்.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அரசு பேருந்து ஓட்டுநரை செருப்பால் அடித்த பெண்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.