×

அமேசான் தீபாவளி ஆஃபர்- ஃபிளாஸ்க் ஆர்டர் செய்த பெண்ணுக்கு கல் வந்ததால் அதிர்ச்சி

 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் அமேசான் ஆப்பில் ஃபிளாஸ்க் ஆர்டர் செய்த நபருக்கு பார்சலை பிரித்து பார்த்த போது கல் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பெரியார்நகரை சேர்ந்த ரமா என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அமேசான் ஆப் மூலம் சுமார் 400 ரூபாய் மதிப்புள்ள சுடு தண்ணீர் வைக்கக்கூடிய பிளாஸ்க் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அந்த பார்சல் இன்று அமேசான் கொரியர் மூலம் டெலிவரிக்காக வீட்டிற்கு வந்துள்ளது. அதனை வாங்கிய ரமா பிரித்துப் பார்த்தபோது அதில் ப்ளாஸ்க் பதிலாக ஒரு சிறிய கல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து பார்சல் கொண்டு வந்த நபரிடம் கேட்டதற்கு நீங்கள் அமேசான் ஆப்-பில் சென்று புகாரளியுங்கள் என்று கூறி சென்று விட்டார். ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து பிளாஸ்க் ஆர்டர் செய்ததில் பார்சலில் கல் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.