தந்தையை மூட்டையில் கட்டி கொரியர் அனுப்ப முயன்ற பெண்!
பெங்களூருவில் தந்தையை மூட்டையில் கட்டி கொரியர் அனுப்ப முயன்ற பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் 5 பேர் கொண்ட குழுவினர், சாக்கு மூட்டையுடன் கூடிய ஒரு பார்சலை அனுப்புவதற்காக கொரியர் கடைக்கு வந்துள்ளனர். அப்போது சாக்குப்பை அசைவதைக் கண்ட ஊழியர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. சோதித்துப் பார்த்தபோது, அதற்குள் ஒரு ஆண் இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஊழியர்கள் உடனடியாக வியாலிகாவல் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர், ஆனால் அதிகாரிகள் வருவதற்குள் அந்தக் குழுவினர் தப்பிச் சென்றிருந்தனர்.
உகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை காலங்களில் பேருந்து டிக்கெட்டுகள் கிடைக்காததால், ஊர்களுக்கு செல்ல ஒரே வழி இதுதான் என்பதை விளக்கும் விதமாக ரீல்ஸ் எடுப்பதற்காகவே இப்படிச் செய்ததாக அக்குழுவினர் போலீசாரிடம் ஒப்புதல் அளித்துள்ளனர்.. காவல்துறை எச்சரித்ததை அடுத்து, தாங்கள் செய்தது பொறுப்பற்றது எனக் கூறி மன்னிப்புக் கேட்டுள்ளனர். கொரியர் அனுப்ப வந்த 5 பேரில் ஒருவர் சாக்குமூட்டையில் இருந்தவரின் மகள் என்பது குறிப்பிடதக்கது.