பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் - பதற வைக்கும் வீடியோ
Jul 4, 2024, 13:24 IST
ராசிபுரம் அருகே பேருந்தில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பேருந்தில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். காக்காவேரி பகுதி வளைவில் பேருந்து திரும்பிய போது பேருந்தில் நின்று கொண்டிருந்த சாரதா என்ற பெண் எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்துள்ளார் .
இதையடுத்து பேருந்தில் இருந்தவர்கள் கூச்சலிடவே , பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டு படுகாயங்களுடன் இருந்த சாரதாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.