திருவண்ணாமலையில் மின்னல் தாக்கி பெண் பலி
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே மின்னல் தாக்கி பெண் கூலி தொழிலாளி பலியானார்.
கலசப்பாக்கம் தாலுகா, பத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வேண்டா (40), அவரது மாமியார் அம்சா ஆகிய இருவரும் கூலி தொழிலாளிகள். இருவரும் இன்று காலை கிராமத்தில் உள்ள முருகன் என்பவரது நிலத்தில் கடலை செடி பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 1 மணியளவில் திடீரென மின்னல் தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்து அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை கலசப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை, பரிசோதித்த மருத்துவர்கள் வேண்டா வரும் வழியிலேயே வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தார். மாமியார் அம்சா மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மாற்றப்பட்டார்.
தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.