கல் தடுக்கி விழுந்த பெண் பரிதாப பலி! சென்னையில் சோகம்
சாலையில் நடந்து சென்ற பெண் கல் தடுக்கி விழுந்ததில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலே பலியன சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாதவரம் மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சரளா. இவர் மாதாவரம் ரெட் ஹில்ஸ் ரோடு பகுதியில் உள்ள மருந்து கடைக்கு சென்று விட்டு சாலையின் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்பொழுது சாலையின் ஓரத்தில் பள்ளத்தில் இருந்த கல் தடுக்கி கீழே விழுந்துள்ளார். அப்பொழுது மாதவரம் ரவுண்டானாவில் இருந்து மூலக்கடை நோக்கி சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி உள்ளார். இதில் உடல் நசுங்கி சரளா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனை அடுத்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.