☰
×

5வது மாடி பால்கனியில் ஆபத்தான முறையில் சுத்தம் செய்த பெண்..!

 

மகாராஷ்டிராவில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வீட்டைச் சுத்தம் செய்த பெண் ஒருவர், 5வது மாடி பால்கனிக்கு வெளியே நின்றுகொண்டு துடைப்பத்தால் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாதுகாப்பு தடுப்புக்கு வெளியே எவ்விதப் பிடிமானமும் இன்றி ஆபத்தான முறையில் நின்று அவர் சுத்தம் செய்துள்ளார். சிறிது தவறினாலும் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் இருந்த நிலையில், பெண்ணின் செயலுக்கு பலரும் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்து வருகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு வீட்டை சுத்தம் செய்யும் பணியில் பெண் ஒருவர் ஈடுபட்டபோது, எந்தவிதப் பாதுகாப்பும் இன்றி 5-வது மாடியின் பால்கனிக்கு வெளியே நின்று துடைப்பத்தால் சுத்தம் செய்துள்ளார். இந்தச் செயலைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்ததோடு, இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இது தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/kH3mm54bYVc?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/kH3mm54bYVc/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">