×

டம்மி 500 ரூபாய் நோட்டை கொடுத்து  மூதாட்டியை ஏமாற்றிய பெண் - உடனே ஆக்ஷனில் இறங்கிய போலீசார்..! 

 

திருவள்ளூரை சேர்ந்த ஜெயலட்சுமி என்ற மூதாட்டி கடந்த 35 ஆண்டுகளாக திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். 

இந்த நிலையில் மாம்பழம் வாங்க வந்த பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் டம்மி 500 ரூபாய் கொடுத்து ரூ.150 -க்கு மாம்பழம் வாங்கிவிட்டு மீதி பணத்தை வாங்கிச் சென்றார். சிறிது நேரம் கழித்து பையில் வைத்திருந்த அந்த 500 ரூபாய் நோட்டை மூதாட்டி ஜெயலட்சுமி எடுத்து பார்த்தபோது சந்தேகம் ஏற்பட்டது. அந்த ரூபாய்நோட்டை அருகில் இருந்தவர்களிடம் காட்டி கேட்டபோது அது போலியான டம்மி 500 ரூபாய் என்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி மிகுந்த மன வருத்தத்தில் கண்ணீர் விட்டார்.

மருத்துவ செலவுக்கே வியாபாரத்தில் கிடைக்கும் பணம் முழுவதும் செலவாகி விடும் நிலையில் போலியான 500 ரூபாய் கொடுத்து பெண் ஒருவர் ஏமாற்றியதை நினைத்து அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் அந்த போலி 500 ரூபாய் நோட்டை அங்கு வந்தவர்களிடம் காண்பித்து கண் கலங்கியது பார்ப்பவர்களை பரிதாபப்பட வைத்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், இந்த செய்தியை கவனித்த போலீசார் உடனடியாக களத்தில் இறங்கி விசாரணையை தொடங்கினர். ஏமாற்றப்பட்ட மூதாட்டியின் புகாரின் பேரில் திருவொற்றியூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து   கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன்   குற்றவாளியை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த மூதாட்டி தன்னுடைய புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறையினருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

allowfullscreen