☰
×

முதல்வருக்கு புகார் அனுப்பிய அடுத்த சில நாட்களிலேயே கொடூரம்! – தலையில் 2 தோட்டாக்கள் பாயச் சுட்டுக்கொல்லப்பட்ட சமூக ஆர்வலர்!

 

மும்பையை அடுத்த தானே மாவட்டம் உல்லாஸ் நகர்ப்பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ் கஜ் வானி(வயது 50). இவர், உல்லாஸ் நகர் பகுதியில் சில சமூக விரோதிகள் குட்கா, பான்மசாலா விற்பனை செய்து வருவதாகவும், சூதாட்ட விடுதிகளை நடத்தி வருவதாகவும் மாநில முதல்-மந் திரி தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கு சமூகவ லைத்தளம் மூலமாக புகார்களை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து சட்டவிரோத கும்பலால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த மாதம் 27-ந்தேதி சமூகவலைத்தள பக்கத்தில் ஹரீஷ் கஜ்வானி பதிவிட்டிருந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் உல்லாஸ் நகர் ரெயில் நிலையம் அருகே ஹரீஷ் கஜ் வானி மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரது தலையில் 2 தோட்டாக்கள் பாய்ந்திருந்தது.

சட்டவிரோத தொழில்களுக்கு எதிராக புகார் அளித்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் நேற்று அதிர டியாக கைது செய்தனர்.