×

மதுபிரியர்கள் ஷாக்..! நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது..!  

 

டாஸ்மாக் கடைகளுக்கு தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் நாட்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் திருவள்ளுவர் தினம் - ஜனவரி 15, குடியரசு தினம் - ஜனவரி 26, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மகாவீர் ஜெயந்தி, மே தினம் - மே 1, சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15, நபிகள் நாயகம் பிறந்த நாள் (மிலாது நபி), காந்தி ஜெயந்தி - அக்டோபர் 2, ஆகிய தினங்களில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது.

அந்த வகையில் சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் வெளியிட்டு அறிக்கையில், இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 15.08.2025. வெள்ளிக்கிழமை அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், 

FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையங்கள் / மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 15.08.2025 (வெள்ளிக்கிழமை) அன்று சுதந்திர தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்