நாட்டு மருந்தால் பறிபோன இரட்டை குழந்தைகள் உயிர்
பெரம்பலூரில் வயிற்றுப்போக்கால் இரட்டை பெண் குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி- தனலட்சுமி தம்பதி. கந்தசாமி வெளிநாட்டில் உள்ள நிலையில், தனலட்சுமி தனதுக்கு இரட்டை பெண் குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்துவந்துள்ளார். இந்நிலையி 11 மாத இரட்டை பெண் குழந்தைகளான இருவரும், சில தினங்களாக காய்ச்சல், வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்துள்ளனர். முதலில் காய்ச்சல், வயிற்றுப்போக்குக்கு தனலட்சுமி ஆங்கில மருந்து கொடுத்துள்ளார். ஆனால் குழந்தைகள் உடல் சரியாகாததால், பின்னர் நாட்டு மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் மூச்சுத்திணறி அக்குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் பெண் குழந்தைகள் என்பதால் கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.