×

இப்படி கூட மரணம் வருமா..?? மும்பையில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்..!!

 

மும்பையை சேர்ந்த மோகித் சோனி என்ற இளைஞர், பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவர், மும்பை மீரா-பயந்தர் சாலையில், பிளசண்ட் பார்க் சொசைட்டி அருகே, 15 ஆண்டுகள் பழமையான ஒரு காரை நிறுத்தி விட்டு, அதன் இருக்கையில் அமர்ந்து பரிசோதித்து வந்தார்.

 

அப்போது இருக்கைக்கு அருகே இருந்த ஏர்பேக், திடீரென வெளிவந்து வேகமாக விரிவடைந்தது. இதனால், மோகித் சோனியின் கழுத்துப் பகுதியை தாக்கியுள்ளது.

 

இதில் பலத்த காயமடைந்த மோகித் சோனி, காருக்குள்ளேயே மயங்கி கிடந்தார். அந்த வழியாக வந்தவர்கள், அதை பார்த்து, அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, அங்கு சென்று காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு, மோகித் சோனியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பயந்தரில் உள்ள பண்டிட் பீம்சென் ஜோஷி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோகித் சோனி, அந்த காரை வேறு ஒருவருக்கு விற்பதற்காக பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது காரின் பகுதியில் உள்ள ஏர்பேக் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஏர்பேக் வேகமாக பறந்து வந்து மோகித் சோனி, கழுத்தின் வலது பக்கத்தில் பலமாக தாக்கியுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இருப்பினும், மோகித் இறப்புக்கான துல்லியமான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.