வெள்ளம் வரும்போது கூட கோட்-சூட் போட்டு வருவாரா விஜய்? - விமர்சனம் செய்த அண்ணாமலை..!
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் ஸ்டான்போர்ட் இந்திய மாநாடு நடந்தது. இதில் பாஜக சார்பில் அண்ணாமலை பங்கேற்றார். அதேபோல் காங்கிரஸ் சார்பில் சசி தரூர் பங்கேற்றார்.
இந்த விவாதத்தின்போது, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அணிந்திருக்கும் 'கோட் சூட்' (Coat Suit) ஆடை குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
அண்ணாமலை பேசுகையில், இன்னும் சில மாதங்களில் சென்னையில் வெள்ளம் வரும்; அப்போது கோட்-சூட்டுடன் விஜய் நேரில் சென்று பார்வையிடுவாரா என்பதை பார்க்கலாம்” என அவர் கூறினார்.மேலும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேரிடர் காலங்களில் வேட்டி சட்டையுடன்தான் நேரடியாகக் களத்தில் இறங்கிப் பணியாற்றினார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அண்ணாமலை தனது பேட்டியில், தமிழக பண்பாட்டை முன்னிறுத்துவதாகக் கூறும் ஒருவர், மாநிலத்தின் மிக உயரிய இடமான சட்டமன்றத்திற்கு வரும்போது ஏன் பாரம்பரிய உடையைத் தவிர்க்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.