மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்கும் விஜய்?
அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்திலேயே தாய்மாமன் சீர் முறைக்கு மிகவும் பெயர் பெற்ற பகுதி உசிலம்பட்டி என்பதால், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்க இந்த இடம் பொருத்தமாக இருக்கும் என முதலில் தேர்வு செய்யப்பட்டது. உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெண்களுக்கு 'தாய்மாமன் சீர்' கொடுக்கும் பாரம்பரிய கலாசாரம் மிக அதிகமாக உள்ளது. ஏழை எளிய குடும்பங்கள் கூட கடன் வாங்கியாவது தங்களது மருமகள்களுக்கு இந்த சீரினைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். எனவே, இந்த உணர்வுப்பூர்வமான கலாசாரத்தோடு பொருந்திப் போகும் வகையில் இத்திட்டத்தை அங்கிருந்து தொடங்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் அதிகாரிகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வரும் 28ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வரும் 28 ஆம் தேதி மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுரை அரசு மருத்துவமனையில் தொடங்கி வைக்க உள்ளார். அத்திட்ட தொடக்க நிகழ்வுக்கு பின்னர் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.