நயினார் நாகேந்திரன் மீது கைது நடவடிக்கை எடுப்பாரா விஜய்?
முதல்வரின் குடும்பத்தை தவறாக பேசிய நயினார் நாகேந்திரன் மீது முதல்வர் விஜய் கைது நடவடிக்கை எடுப்பாரா? என கேள்வி எழுந்துள்ளது.
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார். அப்போது அவர், "சட்டசபைக்கு சென்று அப்பா எங்கே, அப்பா எங்கே என்று சிலர் தேடுகிறார்கள். வீட்டுக்கு சென்று அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார் என்று கூறுவார்கள். அதை விட்டுவிட்டு, சட்டசபைக்கு சென்று அப்பாவை தேடினால் யாருக்கு தெரியும்? இப்படிப்பட்டவர்களின் ஆட்சிதான் இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது" என பேசினார்.
நியாயமாகப் பார்த்தால் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு வழக்குப்பதிவு செய்யலாம். அவதூறு பேச்சுகளுக்கு கைது செய்யத்தேவையில்லை, கூடவும் கூடாது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்த த.வெ.க அரசு, இப்போது நயினார் நாகேந்திரனைக் கைது செய்யவில்லை என்றால் ‘பா.ஜ.கவிடம் பம்முகிறாரா விஜய்?’ என்ற கேள்வி வரும். இதுவரை பா.ஜ.கவை நேரடியாக எதிர்க்காத விஜய், அந்த கட்சியின் மாநில தலைவரைக் கைது செய்தால், டெல்லியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். அதன் பின்விளைவுகளைச் சந்திக்க நிறைய துணிச்சல் தேவைப்படும். மேலும் அதே பேச்சில் நயினார் நாகேந்திரன் முருகன், கிறிஸ்துவர் ஆகியவற்றையும் பேசியிருக்கிறார். அதற்காகத்தான் கைது என்று பிரச்னையை பா.ஜ.கவால் எளிதாகத் திசை திருப்ப முடியும். நயினார் நாகேந்திரனைக் கைது செய்யவில்லை என்றால் மக்கள் மத்தியில் இரண்டு கேள்விகள் எழும். பா.ஜ.கவுக்குப் பயப்படுகிறாரா விஜய் என்பது ஒன்று. முதலமைச்சர் விஜயைப் பற்றிக்கூட தப்பாகப் பேசலாம். ஆனால் த்ரிஷாவைப் பற்றி யாராவது பேசினால் கைது என்றால் அதன் அர்த்தம் என்ன என்பது மற்றொன்று. த.வெ.க அரசு என்ன செய்யப்போகிறது? என்பது கேள்வி குறியாக உள்ளது.