தங்கம் விலை குறையுமா அல்லது உயருமா?. பாபா வங்காவின் 2026 ஆம் ஆண்டின் மிகப்பெரிய கணிப்பு..!
பாபா வங்காவின் வைரலான கணிப்பின்படி, 2026 ஆம் ஆண்டில் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் ஒரு நிதி நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். இது பாரம்பரிய வங்கி முறையை பாதிக்கலாம். இந்த நெருக்கடியின் காரணமாக வங்கி நெருக்கடி, நாணயத்தின் மதிப்பு குறைதல் மற்றும் சந்தையில் பணப்புழக்கம் குறைதல் போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம்.
நிதி நெருக்கடி ஏற்பட்டால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயரும், ஏனெனில் நிதி நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் தங்கம் மற்றும் வெள்ளியில் பெரிய அளவில் ஏற்றம் காணப்படும். எனவே அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை 25 முதல் 40 சதவீதம் வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாபா வங்காவின் 2026 பற்றிய கணிப்பு
- 2026 ஆம் ஆண்டில் மக்கள் பல பயங்கரமான இயற்கை பேரழிவுகளை சந்திக்க நேரிடும்.
- மனிதர்கள் முதல் முறையாக வேற்றுகிரகவாசிகளை நேரடியாக சந்திப்பார்கள்.
- செயற்கை நுண்ணறிவு (AI) ஆதிக்கம் செலுத்தும், இது மனித வாழ்க்கைக்கு ஆபத்தாக இருக்கலாம்.
2026 ஆண்டில் உலகைப் பாதிக்கக்கூடிய தொடர்ச்சியான பேரழிவுகள் ஏற்படும். அவை குறிப்பாக இயற்கை பேரழிவுகளாக இருக்கும். உலகின் சில பகுதிகளில் பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் கடுமையான காலநிலை மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது
2026 ஆம் ஆண்டில், செயற்கை நுண்ணறிவு (AI) பெரிய முன்னேற்றத்தை அடையக்கூடும். அது மனிதகுலத்தையும் ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்று கணித்துள்ளார். வேற்றுகிரகவாசிகளுடனான தொடர்பு அடுத்த ஆண்டு முதல் நவம்பரில் நடைபெறும் என்று அவர் கணித்தார்.
பூமியின் நிலப்பரப்பில் 7 - 8 சதவீதம் வரை பாதிக்கப்படலாம். இதனால் பூமியில் வாழக்கூடிய ஜூவ ராசிகளுக்கு நோய்தொற்று போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக என்று பாபா வங்கா கணித்துள்ளார்.மேலும் சில பகுதிகள் நீரில் முழ்கடிக்கும் சூழல் உண்டாகும்.
மேலும் பூமியின் வளிமண்டலத்தில் ஒரு பெரிய விண்கலம் நுழையும் என்றுபாபா வாங்கா கணித்து வைத்துள்ளார். ஆனால் பாபா வாங்கா உண்மையில் இக்கணிப்புகளை கூறியதாக உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லை என்பதே நிதர்சனம்.
மூன்றாம் உலகப் போர் 2026 இல் தொடங்கும். இதனால் உலக நாடுகளிடையே பதட்டங்கள் அதிகரிக்கும், அதுமட்டுமின்றி தைவானை சீனா கையகப்படுத்தும் என்றும், ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நேரடி மோதல் உண்டாகும் இவை 2025 விட அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று பாபா வங்கா முன்கூட்டியே கணித்துள்ளார்.