இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுகளை நனவாக்குமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன் கேள்வி!
Jun 1, 2026, 12:59 IST
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 5,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில், தமிழக அரசுத்துறைகளில் 40%-க்கும் அதிகமான பணியிடங்கள் காலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளர்.
ஏற்கனவே ஐந்து லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவோம் என்று வாக்குறுதி அளித்து, ஐந்தாண்டுகாலமாக ஒரு லட்சம் பணியிடங்களைக் கூட நிரப்பாமல் ஏமாற்றிய முந்தைய திமுக அரசின் வஞ்சகத்தால் தற்போது தமிழக அரசுத்துறைகள் காலிப்பணியிடங்களால் நிரம்பி வழிகின்றன என்றும், தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பற்றாக்குறையால் தவித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் பிரதிநிதியாகவும் மாற்றுச் சக்தியாகவும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் தவெக அரசு உடனடியாக தகுதித் தேர்வுகளை நடத்தி, இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளை நனவாக்கி, அரசு இயந்திரம் சீராகச் செயல்பட வழிவகுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.