×

நடைமுறையில் இருக்கும் 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடருமா? தமிழக அரசு சொல்வதென்ன..? 

 

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய்  பதவியேற்றார். பதவியேற்பு விழா மேடையிலேயே முக்கிய 3 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய் அது குறித்த கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதன் படி, 2 மாதங்களில் 500 யூனிட்கள் வரை மின் நுகர்வு செய்வோருக்கு, 200 யூனிட் மின்சாரம் இலவசம்.

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும்.

தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார்.

3 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்ட நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த 3 திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், தமிழக அரசு மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், 200 யூனிட் இலவச மின்சாரம் குறித்து நிபந்தனையுடன் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதாவது, இரண்டு மாதங்களுக்கு வீட்டு மின் இணைப்பில் 500 யூனிட்களுக்கு உள்ளே பயன்படுத்துவோருக்கு மட்டுமே 200 யூனிட்கள் இலவசமாகவும், 500க்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட்கள் இலவசமாகவும் கணக்கிடப்படும். ஏற்கனவே உள்ள மானியத்துடன் கூடுதலாக ரூ.1,730 கோடி செலவாகும். முந்தைய 100 யூனிட் மின்சார திட்டமும் தொடரும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.