விஜய் மாணவர்களுக்கு கொடுக்கும் கல்வி உதவித்தொகை இந்த வருடம் கிடைக்குமா?
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் மாணவர்களுக்கு கொடுக்கும் கல்வி உதவித்தொகை இந்த வருடம் கிடைக்குமா? என்பது மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்கள் கட்சி தொடங்குவதற்கு முன் 234 தொகுதிகளுக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பது வழக்கமாகவே வைத்திருந்தார். மாணவர்கள், நடிகர் விஜய் அவர்களிடம் பரிசு வாங்குவதை பெரும் அதிர்ஷ்டமாகவே பார்த்திருந்தார்கள். கடந்த காலங்களில் பரிசு வாங்க வரும் பொழுது மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் அடுத்த முறை நாங்கள் உங்களை பார்க்கும் பொழுது நீங்கள் முதலமைச்சராக இருப்பீர்கள் என மாணவர்களும், பெற்றோர்களும் கூறி இருந்தனர் அது இந்த ஆண்டு சாத்தியமாகிவிட்டது.
மாணவர்கள் பெற்றோர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் விஜய் அவர்கள் எப்பொழுது கல்வி உதவித் தொகையை வழங்குவார் என? நடைபெற்று முடிந்த தேர்தலில் விஜய் அவர்கள் வெற்றி பெறுவதற்கு மாணவர்களும் பெரிய பங்காற்றினர். அதனால் இந்த ஆண்டு விஜய் அவர்கள் கல்வி உதவித் தொகையை வழங்குவதை மிக சீரும் சிறப்புடன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு முதலமைச்சர் விஜய் அவர்கள் செய்வார் என தமிழக வெற்றிக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.