×

திமுக அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்குமா..? டி.கே.எஸ். இளங்கோவன் பதில்! 

 

திமுக செய்தித் தொடர்புத் துறை தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பேசியது குறித்தும், திமுக அதிமுக கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா? என்ற கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.

டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில்,“தமிழ்நாட்டு மக்கள் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு வாக்களித்ததற்காக, அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.   ”இந்த கூட்டத்தின் மூலம் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கண்டனங்களை தெரிவித்திருக்கிறோம். காங்கிரஸ் 28 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்றால் அவர்களை மற்ற 23 இடங்களில் தோற்கடித்தது யார் என அவர்கள் எண்ண வேண்டும். சிந்திக்காமல் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்றால், அவர்களுடைய அரசியல் அனைத்து மாநிலங்களிலும் இவ்வாறு தான் இருக்கிறது.

திமுக பெற்ற வாக்கு எண்ணிக்கைக்கும், தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வாக்கு எண்ணிக்கைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. அதனால், மக்கள் எங்களோடு இருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதே இந்த கூட்டத்தின் நோக்கம்” என்றார். 

அதேபோல, அதிமுகவுடன் கூட்டணி அல்லது ஆதரவு பற்றி தலைவர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனைத் தலைவர் மறுத்துள்ளார். அப்படி ஒரு முடிவை தலைவர் எடுத்தால் அதனை திமுக ஏற்றுக்கொள்ளும். அதேசமயம்,ஆளுநர் எண்ணிக்கையைத் தானே கேட்கிறார்? அந்த எண்ணிக்கையை அவர்கள் காட்டினால் அனுமதிக்கப்போகிறார். நாங்கள் எப்படித் தடுக்க முடியும்?

உண்மையிலேயே சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்ற எண்ணிக்கையை, ஆதரவை காட்டினால் தான் முதலமைச்சராக முடியும். இது எல்லா மாநிலங்களிலும் காலம் காலமாக நடந்து வருவதுதான்” என விளக்கமளித்தார். 

ஆளுநர் இப்பொழுது அவர்களுக்கு எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்து, நாளை சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரிலேயே அந்த அரசாங்கம் கவிழும் நிலை ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? ஆளுநர் தானே பொறுப்பு. எனவே அவருடைய முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், அதில் நாங்கள் தலையிடவில்லை” என பதிலளித்தார்.