வெகுவிரைவில் அமைச்சராகும் சௌமியா?
சௌமியா அன்புமணி விரைவில் அமைச்சராக வேண்டும் என்பதே தொண்டர்களின் ஆசை என பாமக நிர்வாகிகள் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசுமைத்தாயகம் நாளை முன்னிட்டு சென்னை மேடவாக்கத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய பாமக நிர்வாகி, “சௌமியா அன்புமணி வெகுவிரைவில் அமைச்சராக வேண்டும் என்பதே தொண்டர்களின் ஆசை. என்னுடைய ஆசை, பாமகவினருடைய ஆசை. எங்களுடைய அண்ணியார் மிக விரைவில் அமைச்சராக வேண்டும். குறிப்பாக சௌமியா அன்புமணி ஐநா மன்றத்திற்கு சென்று புவி வெப்பமடைதல் பற்றி பலமுறை பேசியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவர் எம்.எல்.ஏவாகி சட்டமன்றத்திலும் அளப்பறிய, மிகப்பெரிய கருத்துக்களை மிக எளிமையாக அரசுக்கு புரியும்படி பேசியுள்ளார். விவசாயிகளின் பிரச்சனையை பற்றியும் பேசியுள்ளார். மக்கள் பிரச்சனைகளை தொடர்ந்து பேசி வருகிறார். 2 நாட்களுக்கு முன் கூட பள்ளிக்கரணை சதுப்புநில பிரச்னைக்காக கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றார்” என்றார்.
நிர்வாகியின் பேச்சை பொறுமையுடன் சிரித்தப்படி கேட்டு கொண்டிருந்தார் சௌமியா அன்புமணி. தவெகவுடன் பாமக கூட்டணி அமைக்கலாம் என கூறப்படும் நிலையில் நிர்வாகியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.