×

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படுமா? பள்ளிக்கல்வி இயக்குநர் விளக்கம்!

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இதனால் கல்வி நிறுவனங்கள் கடந்த பல மாதங்களாக மூடப்பட்டு கிடந்தன. இதையடுத்து கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது, கொரோனா பரவல் ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் முதல் 9 முதல் 12 வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம்
 

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இதனால் கல்வி நிறுவனங்கள் கடந்த பல மாதங்களாக மூடப்பட்டு கிடந்தன. இதையடுத்து கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது, கொரோனா பரவல் ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் முதல் 9 முதல் 12 வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டது .

அதேசமயம் 9, 10 மற்றும் 11 ஆம் ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. அதாவது 10 , 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.ஆனால் 12 வகுப்புகளுக்கு மட்டும் மே 3 ஆம் தேதி பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் வாக்குப்பதிவு பெரும்பாலும் பள்ளிகளிலேயே நடைபெறும். அதேபோல் கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என்றும் ஏப்.1ஆம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.