×

தமிழகத்தில் பிற வகுப்புகளும் திறக்கப்படுமா? ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் பரவ தொடங்கியது. இதனால் தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். இதையடுத்து கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரனோ ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தலைமை
 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் பரவ தொடங்கியது. இதனால் தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். இதையடுத்து கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரனோ ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் 11 மணிக்கு ஆட்சியாளர்களுடன் ஆலோசிக்கிறார். இதை தொடர்ந்து முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று மதியம் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை செய்கிறார். மாதந்தோறும் ஊரடங்கு முடியும் தருவாயில் முதல்வர் பழனிசாமி, ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவுடன் ஆலோசனை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த முறையும், கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டிப்பது , பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.

மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனையின் படி ஏற்கனவே தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள், பிற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க விரைவில் முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.