×

தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டை நாளை அறிவிக்கிறார் ஓபிஎஸ்?

 

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்திய பிறகு, கூட்டணி முடிவை ஓபிஎஸ் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் தனது இல்லத்தில் தங்கியிருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ‌.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு புறப்படும் முன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். அதற்கு பொறுமையாக இருங்கள் என்று மட்டும் பதலளித்து விட்டு ஓபிஎஸ் புறப்பட்டு சென்றார்.

இதனிடையே நாளை பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ் ஆலோசனைக் நடத்த உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து சென்னை சென்று அங்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிறகு தனது நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிப்பார் என அவரது ஆதரவாளர்கள் கூறினர்.