×

தமிழ்நாட்டில் ஊரடங்கு தொடருமா? இன்று முதல்வரைச் சந்திக்கிறது மருத்துவக்குழு

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று இன்று உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா நோய்க்கு இன்றுவரை மருந்து கண்டறியப்பட வில்லை. எனவே, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கையே பலரும் வலியுறுத்துகின்றனர். கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதுமே ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மார்ச் 24-ம் தேதி தொடங்கிய இந்த ஊரடங்கு, ஏப்ரல், மே, ஜூன் மாதம் என 100 நாட்களைக் கடந்து நீண்டுக்கொண்டே இருக்கிறது. ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் நோய் தொற்றைக் கட்டுப்படுத்தியிருக்கிறோம் என்று
 

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று இன்று உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா நோய்க்கு இன்றுவரை மருந்து கண்டறியப்பட வில்லை. எனவே, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கையே பலரும் வலியுறுத்துகின்றனர். கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதுமே ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மார்ச் 24-ம் தேதி தொடங்கிய இந்த ஊரடங்கு, ஏப்ரல், மே, ஜூன் மாதம் என 100 நாட்களைக் கடந்து நீண்டுக்கொண்டே இருக்கிறது.

ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் நோய் தொற்றைக் கட்டுப்படுத்தியிருக்கிறோம் என்று அரசுத் தரப்பிலும் இந்தக் காலத்தை அரசு விரயம் செய்துவிட்டதாக எதிர்க்கட்சிகளும் கூறிவருகின்றன. இந்திய அளவிலும் சரி, தமிழ்நாட்டிலும் கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துகொண்டே இருப்பதைப் பார்க்கிறோம். நேற்று, (ஜூன் 28) மட்டும் 3,940 பேர். இதனால் மொத்த எண்ணிக்கை 82,275 ஆக அதிகரித்திருக்கிறது.

கடந்த 10 நாள்களுக்கு முன் சென்னையில் மட்டும் அதிகரித்துவந்த கொரோனா நோய்த்தொற்று, தற்போது தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அதிகரித்து வருகிறது. மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்த்தியவற்றை நீக்கி, முழு ஊரடங்கை அமல் படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தற்போது உள்ள ஊரடங்கு அரசு அறிவிப்பின்படி ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது.

மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் ஜூலை 31-ம் வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவெடுத்துள்ளனர். அவற்றைப் போலத் தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிக்கவே வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. கொரோன நோய்த் தொற்று பரவும் நிலை குறித்து மருத்துவக் குழுவுடன் தமிழக முதல்வர் இன்று ஆலோசனை செய்கிறார்.அக்குழு கொடுக்கும் முடிவைப் பொருத்து ஊரடங்கு நீடிக்கப்படுமா.. நீடிக்கப்பட்டால் எத்தனை நாள்கள்? உள்ளிட்ட முடிவுகளை அரசு எடுக்கும் எனத் தெரிகிறது.