×

இப்படி கூட மரணம் வருமா ? சென்னையில் குக்கர் வெடித்து பெண் பலி..!

 

திருவான்மியூரை சேர்ந்தவர் ஆறுமுகம்(62). இவரது மனைவி ராஜலட்சுமி (55) இவர்களுக்கு யுவ்ராஜ் என்ற மகனும், சந்தியா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் வீட்டிற்கு பழுதான ஏசியை சரிசெய்ய யுவராஜ் நண்பரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது நண்பருக்கு மதிய சாப்பாடு தயார் செய்யும்படி தாய் ராஜலட்சுமியிடம் மகன் கூறியுள்ளார். இதனையடுத்து ராஜலட்சுமி குக்கரில் சாப்பாடு வைத்துள்ளார்.

குக்கரில் நீண்ட நேரமாகியும் விசில் வராததால் சந்தேகமடைந்து பக்கத்தில் சென்ற போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், குக்கரின் மூடி ராஜலட்சுமியின் முகத்தில் பட்டு பின்புறமாக விழுந்ததில் படுகாயமடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மகன் யுவராஜ் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் ராஜலட்சுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சாத்தாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குக்கர் வெடித்து பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.