இப்படி கூட மரணம் வருமா.
?? சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்ட சிறுமி பலி..!
Sep 25, 2025, 10:32 IST
ஈரோட்டை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி பதுமேகலா. இந்த தம்பதியின் மகள் சஞ்சனா ஸ்ரீ (வயது 6). தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில வருடங்களாக மகேந்திரனுக்கு கல்லீரல் பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் அவர், வடபழனி, மன்னார் முதல் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சஞ்சனா ஸ்ரீக்கு பிறந்தநாள் ஆகும். இதனால் ஈரோட்டில் இருந்து பெற்றோரை பார்ப்பதற்காக உறவினருடன் சென்னை வந்தார். பதுமேகலா, மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவளை கடற்கரைக்கு அழைத்து சென்றார். அங்கு பொறித்த மீன், சிக்கன் பிரைடு ரைஸ் ஆகியவற்றை மகளுக்கு வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டுக்கு வந்தனர். அப்போது சஞ்சனா ஸ்ரீக்கு காய்ச்சல் இருந்தது. இதனால் அவளுக்கு மருந்து கொடுத்து தூங்க வைத்தார்.
மறுநாள் காலையில் மகளை எழுப்பியபோது எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தாள். அவளது வாய், மூக்கில் ரத்தம் கசிந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டது என தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த வடபழனி போலீசார் சிறுமி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சிறுமியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.