ஆக.1 முதல் சிலிண்டர் கிடைக்காதா?- வெளியான முக்கிய தகவல்
Jul 29, 2025, 20:59 IST
ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளன.
சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் சமமான வேலை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர் சப்ளை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலை நிறுத்தம் காரணமாக 1,000 லாரிகள் இயங்காது. நாள் ஒன்றுக்கு ரூ.34 கோடி இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.