தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா? அமைச்சர் விளக்கம்..!
Jul 23, 2025, 07:45 IST
தமிழகத்தில் அரசு பஸ்களின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகின்றன. இந்நிலையில், அரியலூரில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சிவசங்கர் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அரசு பஸ் கட்டணம் உயர்வு தொடர்பாக பரவும் கருத்து குறித்து அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், பஸ் கட்டணம் உயர்வு என்பது வதந்தி. பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்தவித திட்டமும் இல்லை. தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வுக்கான சூழ்நிலை ஏற்பட்டபோதும், கட்டண உயர்வை மக்கள் மீது திணிக்காமல் அரசே ஏற்று போக்குவரத்து கழகங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்வு என்பது நிச்சயம் இருக்காது' என்றார்.