வேலைக்கு செல்லக்கூடாது எனக்கூறிய கணவன் காலில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி
வேலைக்குப் போகக்கூடாது என கணவன் கண்டித்ததால் ஆத்திரத்தில் மனைவி கொதிக்கும் எண்ணெய்யை கணவனின் காலையில் ஊற்றினார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை சிதம்பரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் போர்வெல் செட்சொந்தமாக நடத்தி வருபவர் கண்ணன் (வயது 41). இவருக்கு திருமணம் ஆகிஸ்ரீ திவ்யபாரதி (வயது 30) என்ற மனைவியும் 2 மகள்களும்,1, மகனும் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீ திவ்யபாரதி 30கடந்த ஒரு மாத காலமாக மாவு மில்லில் கூலிவேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.இதை கண்ணன் வேலைக்கு செல்லக்கூடாது என மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் சம்பவத்தன்று கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீதிவ்யபாரதி கொதிக்கும் எண்ணெயை எடுத்து கண்ணன் கால் மூட்டியில் ஊற்றி உள்ளார். இதில் கண்ணன் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் கண்ணனை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கண்ணன் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளர் சையத் அப்சல்வழக்கு பதிவு செய்து ஸ்ரீ திவ்ய பாரதியை கைது செய்தார்.