×

காருக்கு ரிவர்ஸ் பார்க்க சென்ற மனைவி மீது கணவன் ஓட்டிய கார் மோதியது! ஆசையாக வாங்கிய காரே எமனான கொடூரம்

 

சென்னை அடுத்த ஆவடியில் வீட்டின் பார்க்கிங் பகுதியில் கணவரின் கவனமின்மையால் கார் மோதி மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி கோனாம்பேடு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (38). அவரது மனைவி இந்துமதி (34). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன் பழைய ஷிப்ட் காரை ஒன்றை வாங்கி கார் ஓட்டும் பயிற்சி பெற்று வருகிறார். நேற்று காலை  குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் உள்ள போர்ட்டிக்கோவில் காரை ஏற்றும் போது, வேகமாக ஏற்றியதாக கூறப்படுகிறது. அப்போது, காரை ரிவர்ஸ் பார்க்க வலது புறத்தில் நின்றிருந்த சுமதி மீது, வேகமாக உரசியதில் காருக்கும் சுவற்றுக்கும் நடுவே சிக்கிக் கொண்டார். 

இதில் நெஞ்சு மற்றும் வயிறு பகுதியில் உள்காயம் ஏற்பட்டுள்ளது  இதில் மயங்கி விழுந்தவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். ட்ரூ வேல்யூ வில் கார் வாங்கிய தம்பதிகள் கார் ஓட்டுவதற்காக தனியார் பயிற்சி பள்ளியில் கடந்த ஒரு மாதமாக பயிற்சி எடுத்து முடித்து ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளனர்.