×

ஓடும் ரயிலில் இருந்து  தவறி விழுந்த கணவனை காப்பாற்ற முயன்ற மனைவியும் பலி

 

ஆரணி அருகே ஓடும் ரயிலில் இருந்து  தவறி விழுந்த கணவனை காப்பாற்ற முயன்ற மனைவியும் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே தம்பதியினர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கள்ளகுறிச்சி மாவட்டம் அய்யனார் பாளையம் கிராமத்தை சேர்ந்த சிவகண்டன்(37) கலையரசி தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகளுடன் மும்பையில் ஹாட்டலில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் அய்யனார் பாளையம் கிராமத்தில் துக்க நிகழ்ச்சிக்கு செல்ல மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுள்ளனர். இன்று விடியற்காலையில் வடமாதிமங்கலம் தண்டவாளத்தில் செல்லும்போது சிவகண்டன் திறந்து இருந்த கதவு முன்பு நின்று வேடிக்கை பார்த்து வந்துள்ளதாக கூறப்படுகின்றன. மேலும் அப்போது ஓடும் ரயிலில்  சிவகண்டன் கால் தவறி கீழே விழுந்தார். இதனை கண்ட மனைவி கலையரசி கணவனைக காப்பாற்ற முயன்ற போது இருவரும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் களம்பூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தகவலறிருந்து வந்த காட்பாடி ரயில்வே போலீசார் சிவகண்டன், கலையரசி ஆகியோரின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.