×

கணவர் ஏசி வாங்கி தராத விரக்தியில் மனைவி தூக்கிட்டு தற்கொலை 

 

திருவள்ளூர் அருகே கணவர் ஏசி வாங்கி தராத விரக்தியில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருவள்ளூர் அடுத்த பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (26). அவர் உடன் படித்த புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மோனிகா (23) என்ற இளம்பெண்ணை  காதலித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். தம்பதிகளுக்கு 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாமல் இருந்து வந்துள்ளனர். இருவரும் திருவள்ளூர் பகுதியில் உள்ள பிரபல துணிக்கடையில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். மோனிகா கடந்த சில நாட்களாக கோடை காலம் என்பதால் வீட்டிற்கு கணவரிடம் ஏசி வாங்கித்தரக்கோரி கேட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு கணவர் ஆகாஷ், அவருடைய சகோதரர்  அவினாஷ், தந்தை மற்றும் தாய் ஆகிய நான்கு பேரும் வீட்டின் மொட்டை மாடியில் உறங்கச் சென்றுள்ளனர். காலை கணவர் ஆகாஷ் கீழே வந்து பார்த்தபோது கதவு உள் பக்கம் தாழிடப்​பட்டு இருந்​ததுள்ளது. கதவை தட்டியும் சத்தம் போட்டும், பார்த்தும் மோனிகா கதவை திறக்காததால் கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்த போது மனைவி மின்விசிறியால் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு கணவர் அதிர்ச்சியடைந்துள்ளர். சம்பவம் தொடர்பாக புல்லரம்பாக்கம் போலீசாருக்கு தெரியவந்ததை தொடர்ந்து  மோனிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மோனிகாவின் பெற்றோர்கள் தனது மகள் வரதட்சனை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் மரணத்தின் சந்தேகம் உள்ளதாகவும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்,