×

அமைச்சர் பொன்முடி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?- ஐகோர்ட் கேள்வி

 

அமைச்சர் பொன்முடி வெறுப்புணர்வுடன் பேசியிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் பொன்முடி அண்மையில் இந்து சமயங்களை விலைமாதுவுடன் ஒப்பிட்டு ஆபாசமாக பேசியிருந்தார். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், அவரை கட்சி பொறுப்பிலிருந்து நீக்கினார் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த தலைமை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  அமைச்சர் பொன்முடி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இந்து சமயங்களை இழிவு படுத்தியுள்ளார் பொன்முடி. பொன்முடியின் கருத்துகள் இந்து சமயத்தை, பெண்களை இழிவுப்படுத்துவதாக அமைந்துள்ளது. தான் பேசியதை பொன்முடி ஒப்புக்கொண்டுள்ளார். கட்சி நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது, போலீஸ் நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது. அமைச்சர் என்பதால் பொன்முடிக்கு  காவல்துறை சலுகை வழங்க முடியாது. சைவ, வைணவ சமயங்களின் பட்டையும், நாமமும் புனிதமானது. ஆபாசமாக மட்டும் அவர் பேசவில்லை, இரு சமூக மக்களையும் அவமானப்படுத்தியுள்ளார் என்றார்.

இதுபோன்ற விவகாரங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவும், பொன்முடிக்கு இடப்பட்ட உத்தரவையும் சுட்டிக்காட்டிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  பொன்முடிக்கு எதிராக தலைமை நீதிபதி அமர்வு விசாரணை நடத்த வேண்டும். அதற்காக நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை கையிலெடுக்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.