×

அமைச்சர் செங்கோட்டையன், திருமாவளவன் நிகழ்ச்சியில் திடீர் மின் தடை ஏன்?- மின்வாரியம் விளக்கம்

 

வேலூரி வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் திருச்செந்தூரில் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திடீர் மின் தடை ஏன் என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து TANGEDCO அளித்துள்ள விளக்கத்தில், “நேற்று இரவு திருச்செந்தூர் டவுனில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இரவு 10.53 மணிக்கு திருச்செந்தூர் துணை மின் நிலையத்தின் 11 கி.வோ. டவுன் ஃபீடரில் Passing Fault காரணமாக மின் தடை ஏற்பட்டது. பின்னர், இரவு 10.55 மணிக்கு ஃபீடர் மீண்டும் Charge செய்யப்பட்டு, இயல்பான நிலையில் இருந்தது. மின் தடை 2 நிமிடங்கள் மட்டுமே ஏற்பட்டது. 

இன்று காலை 11.00 மணிக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வருகையின் போது, வேலூர் சர்க்யூட் ஹவுஸ் மின்மாற்றி ஃபியூஸ் பழுதடைந்தது. உடனடியாக PWD துறை பணியாளர்களால் மாற்று மின் விநியோகத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது மின் விநியோகம் சீராக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.