×

ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்வதில் ஆர்வம் காட்டுவது ஏன்? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் ஏராளமான பிரச்னைகள் உள்ள நிலையில் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதில் தமிழக அரசு ஆர்வம் காட்டுவது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.க கூட்டம் ஒன்றில் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளரும் எம்.பி-யுமான ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டோர் உயர் பதவி பெறுவதற்கு தி.மு.க தான் காரணம் என்ற வகையில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தவறான அர்த்தத்தில் பேசவில்லை என்று அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். அது தொடர்பாக
 

தமிழகத்தில் ஏராளமான பிரச்னைகள் உள்ள நிலையில் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதில் தமிழக அரசு ஆர்வம் காட்டுவது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.க கூட்டம் ஒன்றில் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளரும் எம்.பி-யுமான ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டோர் உயர் பதவி பெறுவதற்கு தி.மு.க தான் காரணம் என்ற வகையில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தவறான அர்த்தத்தில் பேசவில்லை என்று அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். அது தொடர்பாக சென்னை போலீசில் மே மாதம் புகார் வழங்கப்பட்டது. ஜூன் 1ம் தேதி ஆர்.எஸ்.பாரதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆனால், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டதால் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை.

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை மாநகர போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆர்.எஸ்.பாரதிக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்காமல் அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது என்றும், தொற்று நோய் பரவலை காரணம் காட்டி ஜாமீன் வழங்க முடியாது என்றும் கூறியிருந்தது. மேலும் ஆர்.எஸ்.பாரதி வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு இருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டது.
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது “அரசு தரப்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக அக்கறைகாட்டுவது ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும் வழக்கு விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.