×

இன்னும் 2 நாள்தான் இருக்குது.. கொந்தளிக்கும் நடிகை

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் வழக்கிலும், சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கிலும் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கில் மட்டும் ஏன் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று கொந்தளிக்கிறார் நடிகை சாந்தினி. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் வாழ்ந்து வந்ததாகவும் அவருடனான வாழ்க்கையில் பல முறை
 

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் வழக்கிலும், சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கிலும் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கில் மட்டும் ஏன் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று கொந்தளிக்கிறார் நடிகை சாந்தினி.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் வாழ்ந்து வந்ததாகவும் அவருடனான வாழ்க்கையில் பல முறை கருக்கலைப்பு செய்திருப்பதாகவும் ஆதாரங்களுடன் நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி அன்று மணிகண்டனை அடையாறு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் மணிகண்டனை வெளியே அனுப்பினர். காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்றும், தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அந்த நிபந்தனையில் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்திருக்கிறார். இந்த மனுவில், ராஜகோபாலன் மீதான பாலியல் வழக்கிலும், சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கிலும் காவல்துறை உடனடியாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டனர். ஆனால் நான் கொடுத்த பாலியல் வழக்கில் மட்டும் இன்னும் அடுத்த கட்ட விசாரணைக்கு செல்லாமல் அப்படியே தேங்கி கிடக்கிறது. இதனால் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கின் குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

பாலியல் வழக்கில் 90 நாட்களுக்குள் காவல்துறையினர் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலை இருக்கும்போது வரும் 18ஆம் தேதியுடன் 90 நாட்கள் நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் தான் நடிகை சாந்தினி புகார் மனு அளித்திருக்கிறார்.

இதேபோல் கட்டாயப்படுத்தி சட்டவிரோதமாக 3 முறை கருக்கலைப்பு செய்த மருத்துவர் அருண், மருத்துவர் மணிகண்டன் ஆகியோரின் மருத்துவ அங்கீகாரம் ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் மற்றும் மாநில மெடிக்கல் கவுன்சில் என்று கடிதம் அனுப்பி இருக்கிறார் சாந்தினி.