×

சர்க்கரை விலை கிடுகிடு உயர்வு ஏன்?- மத்திய அரசு விளக்கம்

 

சர்க்கரை விலை உயர்வுக்கு எத்தனால் காரணமல்ல அக்டோபர் வரை சர்க்கரை இருப்பு உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இந்தியாவில் சர்க்கரை விலை, கடந்த 12 நாட்களில் கிலோவிற்கு ரூ.10 (1KG ₹62-₹67) உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கரும்பு இருப்பு எத்தனால் தயாரிப்புக்குத் திருப்பி விடப்பட்டதும், போதிய மழையின்மையால் உற்பத்தி குறைந்ததும், பண்டிகைக் காலத் தேவை அதிகரித்ததும் இதற்குக் காரணங்களாக கூறப்படுகிறது. 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்கமதி செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

நாட்டில் அதிகரித்துவரும் சர்க்கரை விலை உயர்விற்கு,எ எத்தனால் உற்பத்திக் கரும்பு திருப்பி விடப்பட்டதே காரணம் என பரவும் தகவல் உண்மையில்லை என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. பண்டிகைக்கால தேவை, சர்வதேச தட்டுப்பாடு, பருவமழை பாதிப்பால் விளைச்சல் குறைந்ததே காரணம் என்றும் விளக்கம் அளித்துள்ளது. சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஜூலை 20இல் கிலோ ரூ.48.18ஆக இருந்த சர்க்கரை விலை, ஆக. 20இல் கிலோ ரூ.55.70ஆக உயர்ந்ததையொட்டி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆக.1- நவ.30 வரை சர்க்கரை வியாபாரிகள் 400 டன்கள் மட்டுமே கையிருப்பு வைக்க அனுமதி தரப்பட்டுள்ளது. செப்.1 முதல் மொத்த பயன்பாட்டாளர்கள் 15 நாள்களுக்குத் தேவையான அளவை விட அதிகம் சேமிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலைகள் அக்.15 முதல் கரும்பு அரவையை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.