×

"அம்மா உணவகத்தில் கருணாநிதியின் படம்" - முன்னாள் அமைச்சர் கண்டனம்!!
 

 

அம்மா உணவகத்தில் கருணாநிதியின் படம் இடம்பெற்றிருப்பதற்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

திருமங்கலம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர் பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் பசிப்பிணி இருக்கக்கூடாது என்று மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கினார் அதனைத் தொடர்ந்து கிடைக்கும் மலிவான விலையில் உணவு வழங்கும் வகையில் கடந்த 2013ஆம் ஆண்டு அம்மா உணவகத்தை  சென்னையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடங்கி வைத்தார்.  அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 200 அம்மா உணவகம் தொடங்கப்பட்டது . இதன் மூலம் நாள்தோறும் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.  குறிப்பாக காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு இத்திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருந்தது.

தற்போது அம்மா உணவகத் திட்டத்தை ஆந்திரா, கர்நாடகா,  ஒரிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.  மதுரையில் தற்போது 12 அம்மா உணவகம் உள்ளது.  இதில் 12 பேர் கொண்ட பெண்கள் குழுவாக இணைந்து அம்மா உணவகத்தை நடத்தி வருகின்றனர்.  முதல் மாலை வரை பணியாற்றி வருகின்றார் திருமங்கலம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள உணவகத்திற்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் விநியோகம் செய்து வருபவர்களுக்கு அது ஆறுமாதம் கொடுக்கப்படாமல், அவர்களை அலைக்கழித்து  வருவதால் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படுவதிலும்,   உணவு தயாரித்து வழங்குவதிலும் பல்வேறு சிரமங்கள்  ஏற்பட்டு வருகிறது. இதனால் அம்மா உணவகங்களில் மலிவு விலையில் உணவு வழங்கி ஏழை எளிய சாமானிய மக்களின் பசித்தீர்க்கும்  சேவையை தொடர்ந்து செய்ய முடியாமல் தடை செய்யப்பட்டுள்ளது.

அம்மா உணவகத்தில் ஜெயலலிதா புகைப்படத்திற்கு அருகில் கலைஞரின் புகைப்படத்தை வைத்து இத்திட்டத்தை திசை திருப்புகிற வகையில்,  ஜெயலலிதாவின் முகத்தை மறைக்க முயற்சிப்பதும், அகற்ற முயற்சிப்பதும் வீண் முயற்சி.  கருணாநிதியின் படத்தை வைப்பதில் அரசு என்ற முனைப்பை ஏழை எளிய சாமானிய மக்களுக்கு உணவு வழங்குவதற்கான முக்கியத்துவத்தை அளித்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் " என்று குறிப்பிட்டுள்ளார்.