பாக்யராஜ் மறைவுக்கு வராதது ஏன்? உடைந்து பேசிய நடிகை ஊர்வசி..!
இயக்குநர் நடிகருமான கே.பாக்யராஜ் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாரடைப்பு காரணமாக ஜூன் 27 அன்று திடீரென உயிரிழந்தது அனைவரையும் சோகத்தையும் வேதனையையும் அளித்தது.
தொடர்ந்து, திரைத்துறையில் இருக்கும் பல பிரபலங்களும் பாக்யராஜின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இறுதியாக, உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
1983-ம் ஆண்டு வெளியான ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக ஊர்வசியை அறிமுகப்படுத்தினார் பாக்யராஜ். ஆனால், பாக்யராஜ் மறைவுக்கு ஊர்வசி அஞ்சலி செலுத்த வரவில்லை என சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இது குறித்து ஊர்வசி எமோஷனலான விளக்கத்தை அளித்துள்ளார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஊர்வசியிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு ஊர்வசி, “நான் அங்கு வந்தால் என்ன உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பேன் எனத் தெரியும். அவரை அப்படி படுக்கையில் பார்க்க என்னால் முடியாது. என் எமோஷனலை என்னால் கட்டுப்படுத்தவும் முடியாது. அவரின் மிகச்சிறந்த மாணவி நான். என் கேலி, கிண்டல்களைத்தான் விரும்புவார். நான் அழுவது அவருக்குப் பிடிக்காது. அவர் எங்கும் போகவில்லை. என் மனதில் கோட் சூட் போட்டபடி அழகாக இருக்கிறார். அது போதும்” என்றார்.
நான் அங்கு சென்று வெளியே வரும்போது ரியாக்ஷன் கொடுக்க வேண்டும். அது என்ன மாதிரி ரியாக்ஷன் என்பது அவர்களுக்குத் தெரியும். அதை மற்றவர்கள் முன்னால் காட்டிக் கொள்வதற்கு எனக்கு விருப்பமில்லை. அது பாக்யராஜ் சாரின் ஆத்மாவுக்குத் தெரியும். அவர்கள் குடும்பத்துக்குத் தெரியும்.பூர்ணிமா பாக்யராஜிடம் பேசினேன். என்னை பொறுத்தவரை பெரிய அளவிலான பாதிப்புகளை தாங்கிக் கொள்ளும் சக்தி எனக்கு இல்லை. மீடியா முன்னால் ஓவர் எமோஷனலாகி, ஓவர் டிராமா கிரியேட் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அது உண்மை என்று சிலரோ, பொய் என்று சிலரோ சொல்வார்கள். அதற்கு நான் இடம் கொடுக்கவில்லை. பாக்யராஜின் மிகச்சிறந்த மாணவியாக நான் இருந்தேன்.
நான் எப்போதும் சிரித்து பேச வேண்டும் என்பது தான் அவருடைய விருப்பம். நான் அழுவது பாக்யராஜுக்கு பிடிக்கவே பிடிக்காது. நான் வந்திருந்தால், அழுதிருப்பேனா.. அவர் அப்படி படுத்திருப்பதை பார்ப்பதற்கு எனக்கு சக்தி கிடையாது. என் மனதில் அவர் நன்றாக நடனமாடிக் கொண்டிருக்கிறார். அது அப்படியே இருக்கட்டும். அவரை ஐஸ் பாக்ஸில் பார்க்க வேண்டும் என நான் நினைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.