×

“எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செஞ்சிட்டு என்ன த.வெ.கவுல சேர வற்புறுத்துனாங்க..”- அனிதா ராதாகிருஷ்ணன் பகீர்

 

6 மணி நேர விசாரணைக்குப் பின் MLA அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும் அவதூறாகவும் பேசியதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனு தள்ளுபடியான 90 நிமிடங்களில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூரில் போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து போலீஸ் வெளியே அழைத்து வந்தபோது ஆவேசமாக கூச்சலிட்ட அனிதா ராதாகிருஷ்ணன், “எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செஞ்சிட்டு என்ன த.வெ.கவுல சேர வற்புறுத்துனாங்க.. நான் ஒத்துக்கவே இல்ல.. தி.மு.கவுல தான் இருப்பேன்னு சொல்லிட்டேன். ஒருபோதும் தன்னை விலைக்கு வாங்க முடியாது” என முழக்கமிட்டபடியே சென்றார்.