தி.மு.க கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? ஐ.எம்.யு.எல் தலைவர் விளக்கம்..!!
தி.மு.க கூட்டணியில் இருந்து விலகுவதாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, திமுக கூட்டணியில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் ஐ.எம்.யு.ல். வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ ஷாஜகான் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க கூட்டணியில் பயணித்தோம். தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு வரவில்லை. எல்லா பக்கமும் விசில் ஊதப்பட்டு, தவெக வெற்றி பெற்றது. குடியரசு தலைவர் ஆட்சி வந்துவிடும் என்பதால் அந்த முடிவை எடுத்தோம். எந்த நிபந்தனையும் இன்றி த.வெ.கவுக்கு ஆதரவு கொடுத்தோம். நாங்கள் கேட்காதபோதும், அமைச்சரவையில் பங்கேற்க தவெக அழைத்தது. இறுதியில் த.வெ.க.விற்கு ஆதரவு என முடிவெடுத்தோம் என திமுக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து ஐ.எம்.யு.எல் தலைவர் காதர் மொகிதீன் விளக்கம் அளித்துள்ளார்.