×

நான் திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? - திருச்சியில் கமல்ஹாசன் விளக்கம்..!

 

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அந்தவகையில் திருச்சியில் பிரசாரம் மேற்கொண்ட கமல் பேசியதாவது: உண்மையான தலைவன் என்றால் மக்களுக்கு பிரச்னை வரும் போது ஓடி வரணும்; ஓடி போய்விடக் கூடாது. நான் சொன்னதில் ஒன்றை இப்போது திமுக நிறைவேற்றி இருக்கிறது. நாட்டில் வேறு யாருமே சொல்லாதது.மகளிர் உரிமைத் தொகை திட்டம். நல்ல ஐடியாவாக இருக்கிறதா? எங்கு இருந்து வந்தாலும் எடுத்துக்கலாம் என்று சொல்லும் பெருந்தன்மை இருக்கிறதா? அதுதான் 15 கட்சிகளையும் ஒருங்கிணைத்து,

இன்று ஒரு கூட்டணியாக வைத்து இருக்க முடிகிறது. அந்த பெருந்தன்மையை பார்த்து தான் நானும் முடிவு செய்தேன். திமுக கூட்டணியில் இணைந்தேன்.

இவ்வாறு கமல் பேசினார்.